கோடைக்கால சுற்றுலா - கட்டாயம் காணவேண்டியவை...!
வெயில் தலைக்கு ஏறி, வியர்வை ஆறாக ஓடும் இந்த கோடையில், கடற்கரையின் குளிர்ந்த மணலில் கால் பதிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு இருக்கும்.
வெயில் தலைக்கு ஏறி, வியர்வை ஆறாக ஓடும் இந்த கோடையில், கடற்கரையின் குளிர்ந்த மணலில் கால் பதிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு இருக்கும். வெயிலுக்கு தப்பி, அலைகளின் ஓசையில் அமைதியை தேடுபவர்களே, இந்தியாவின் கடற்கரை சொர்க்கங்கள் உங்களை வரவேற்கின்றன. பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று தூரம் சென்று, சூரியனையும், கடலையும் நெருக்கமாகச் சந்திக்கும் அற்புத பயணத்துக்கு தயாராகுங்கள்!
1. கோவா – கடற்கரைகளின் ராணி
அன்புக்குரிய கோவா எப்போதும் பயணிகளின் முதல் தேர்வாகவே இருக்கிறது. இயற்கை எழில், பார்ட்டி சூழல், கடற்கரைகளில் குட்டி கடைகள் என கோவாவில் இல்லாததே இல்லை. குடும்பத்துடன் நிம்மதியாக பொழுதை கழிக்கலாம், நண்பர்களுடன் பட்டையை கிளப்பலாம்!
எப்படி செல்வது?
சொந்த வாகனம்: மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு எங்கிருந்தும் சாலை வழி பயணம் செய்யலாம்.
ரயில்: மட்கான் கோவாவின் முக்கிய ரயில் நிலையம்.
பேருந்து: பெரும்பாலான நகரங்களிலிருந்து கோவாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செய்ய வேண்டியவை
கடற்கரையோர குடிசைகளில் தங்கி, இரவு பார்ட்டிகளில் திளைப்பது
தண்ணீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம் – பாராசெய்லிங், ஜெட் ஸ்கீயிங் என சாகசம் தேடுபவர்களுக்கு இதுதான்
பழைய கோவாவை சுற்றி பார்த்து, போர்த்துகீசிய கலாச்சாரத்தை உணரலாம்!
பழைய கோவாவின் வரலாற்றுச் சின்னங்களான சே கதீட்ரல், பாசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்கலாம்.
ஸ்பைஸ் தோட்டங்களுக்கு (spice plantation) ஒரு சுற்றுலா செல்வது சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.
தங்குமிடம், உணவு, ஷாப்பிங்
பட்ஜெட்டில் சுற்றுபவராக இருந்தாலும், வசதி வாய்ப்புகள் பல உள்ளன.
கடற்கரை உணவகங்கள் முதல் சிறிய உணவகங்கள் வரை விதவிதமான உணவு!
அஞ்சுனா பிளே சந்தை கைவினை பொருட்களுக்கும், ஆடைகளுக்கும் பேர் பெற்றது.
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்
தூத்சாகர் அருவி
பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம்
பாலோலம் கடற்கரை தெற்கில் அமைதியான அனுபவத்தை அளிக்கும்.
சபோரா கோட்டை தில் சாஹ் தா பாலிவுட் படத்தின் பிரபலமான இடம்.
2. கோகர்ணா, கர்நாடகா – ஆன்மீகமும் அழகும்
கோவாவின் கூட்டம் பிடிக்காதவர்களுக்கு, கோகர்ணா சிறந்த மாற்று. அமைதியான கடற்கரைகள், பழமையான கோயில்கள், இயற்கையின் மடியில் ஒரு நிதானமான விடுமுறைக்கு ஏற்ற இடம்.
எப்படி செல்வது?
சொந்த வாகனம்: கோவாவில் இருந்து ரம்மியமான சாலை பயணமாக கோகர்ணாவை அடையலாம்.
ரயில்: அன்கோலா, கோகர்ணாவின் அருகிலுள்ள ரயில் நிலையம்.
பேருந்து: பெங்களூரிலிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செய்ய வேண்டியவை
மஹாபலேஷ்வர் கோவிலை தரிசித்து ஆன்மிக அமைதியை பெறுங்கள்.
ஓம் கடற்கரையில் நீண்ட நடைபயணம், அல்லது யோகா பயிற்சி செய்யுங்கள்
அருகிலுள்ள யானை கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.
அரை நாள் படகுப் பயணங்கள் மூலம் அருகிலுள்ள தீவுகளை ஆராயலாம்.
கோகர்ணா கடற்கரைகளுக்கு அருகில் மலையேற்றப் பாதைகள் (trekking trails) உள்ளன.
தங்குமிடம், உணவு, ஷாப்பிங்
கடற்கரையை ஒட்டிய ரிசார்ட்கள் முதல் எளிமையான விடுதிகள் வரை தங்குமிடங்கள் உள்ளன.
உள்ளூர் உணவகங்களில் கடல் உணவுகளை சுவைக்கலாம்!
உள்ளூர் தயாரிப்புகள், கைவினைப் பொருட்களை சந்தைகளில் வாங்குங்கள்.
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்
முருடேஷ்வர்
விபூதி அருவி
மிரிஜான் கோட்டை, அழகான கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
யானா குகைகள், அதன் தனித்துவமான பாறை அமைப்புகளுக்கு பெயர் பெற்றது.
3. வர்கலா, கேரளா – இயற்கையின் மடியில்
கடலோர மலைகள், அடர்ந்த தென்னை மரங்கள், நீல நிற கடல் என இயற்கை ஆர்வலர்களுக்கென்றே படைக்கப்பட்ட இடம் இந்த வர்கலா.
எப்படி செல்வது?
சொந்த வாகனம்: கேரளாவின் பல இடங்களில் இருந்து சாலை வழியே எளிதாக பயணம் செய்யலாம்.
ரயில்: வர்கலாவுக்கு சிறிய ரயில் நிலையம் உள்ளது.
பேருந்து: திருவனந்தபுரத்திலிருந்து வர்கலாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செய்ய வேண்டியவை
வர்கலா கலங்கரை விளக்கம் (lighthouse) ஏறி, கடற்கரையின் அற்புதமான காட்சியை ரசிக்கலாம்.
ஜனார்த்தன சுவாமி கோவில் எனும் 2000 வருடங்கள் பழமையான கோயிலை தரிசிக்கலாம்.
அருகில் காண வேண்டியவை
அஞ்சுதெங்கு கோட்டை, வரலாற்று ஆர்வலர்களுக்கு ஏற்ற ஒரு இடம்.
கப்பில் ஏரி, படகு சவாரி மூலம் கேரளாவின் அழகை ரசிக்கலாம்.