குற்றாலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின் செயல்பட தொடங்கிய படகு குழாம்

ஐந்தறுவி செல்லும் சாலையில் அமைந்துள்ள படகு குழாமை சுற்றுலா பயணிகள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-11 06:39 GMT

படகு சவாரியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் திறந்து வைத்தார். 

ஆண்டுதோறும் சீசன் காலங்களில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிகமாகவே காணப்படும். இந்த சீசன் காலத்தில் சுற்றுலாத் துறை மூலம் ஆண்டுதோறும் ஐந்தறுவி செல்லும் சாலையில் அமைந்துள்ள படகு குழாமை சுற்றுலா பயணிகள் வசதிக்காக திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் தொற்று காரணமாக படகு குளம் திறக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படகு சவாரியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் திறந்து வைத்தார். இதில் துடுப்பு படகு தனி நபர் படகு நான்கு பேர் செல்லும் படகு என 32 படகுகள் உள்ளன இதில் தனிநபர் படகு அரை மணி நேரத்திற்கு 150 ரூபாயும் நான்கு நபர் துடுப்பு படகு 250 ரூபாயும் நான்கு பேர் செல்லும் படகுக்கு கட்டணம் 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு துவங்கப்பட்ட இந்த படகு சவாரியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். மேலும் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் சாரல் திருவிழா இந்த மாத கடைசி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் நிச்சயமாக நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News