டைம்ஸ் குழும தலைவர் காலமானார்
டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின் காலமானார்;
இந்து ஜெயின்
டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின், தனது 84 வது வயதில் காலமானார்.
டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின், தனது 84 வது வயதில் காலமானார். டெல்லியில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர ஆன்மீகவாதியான அவர், சிறந்த இலக்கியவாதி, கலைகளின் மீது ஆர்வம் கொண்டதோடு, பெண்கள் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் ஆவார். டைம்ஸ் அறக்கட்டளை மூலம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பல்வேறு சேவைகளை பாராட்டி, கடந்த 2016ம் ஆண்டு இந்து ஜெயினுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக சேவை, நாட்டின் வளர்ச்சி மீதான ஆர்வம் ஆகியவற்றால் இந்து ஜெயின் எப்போதும் நினைவு கூறப்படுவார் என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.