கூகுள் ஜியோ ஸ்மார்ட் போன் தீபாவளிக்கு தான் வெளியிடப்படும்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது;
ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட் போனை தயாரிக்கிறது. இந்த ஸ்மார்ட் போன், விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் வெளியீடு தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. தற்போது சோதனை முயற்சியாக, சிலரிடம் இந்த ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு, செயல்பாட்டை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன் அம்சங்களை மெருகேற்ற கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனில், கூகுள் அசிஸ்டென்ட், தன்னிச்சையாக உரக்கப் படிக்கும் திறன், செய்திகளை மொழிபெயர்த்து தரும் வசதி, மிகத் துல்லிய கேமரா உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.