AI வாய்ஸ் குளோனிங் அலப்பறை: தமிழில் பாடும் பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் திரைப்பட பாடலை பிரதமர் மோடி பாடுவது போன்ற ஷார்ட் வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.;

Update: 2023-10-14 06:33 GMT

தமிழ் பாடல் பாடும் பிரதமர் மோடி - காட்சி படம் 

குரல் குளோனிங் என்பது ஒருவரின் குரலின் டிஜிட்டல் நகலை உருவாக்கும் செயல்முறையாகும். கடந்த காலத்தில், குரல் அறிதல் மென்பொருளைப் பயன்படுத்தி அல்லது நபரின் குரலைப் பதிவுசெய்து , அந்த பதிவைப் பயன்படுத்தி டிஜிட்டல் நகலை உருவாக்கலாம். இருப்பினும், இன்று, Podcastle போன்ற AI-இயங்கும் இயங்குதளம் மூலம் ஒருவரின் குரலை மிக எளிதாக குளோன் செய்ய முடியும் .

குரல் குளோனிங் பல ஆண்டுகளாக உள்ளது. முதல் குரல் குளோனிங் தொழில்நுட்பம் 1998 இல் உருவாக்கப்பட்டது, அதன் பின்னர் தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்துக்கு வந்து சிறப்புரை ஆற்றும் தருணங்களில் ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்குவார். சில சமயங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார்.

இத்தகைய சூழலில் தமிழ் திரைப்பட பாடலை அவர் பாடுவது போன்ற ஷார்ட் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக இது கவனம் பெற்று வருகிறது. அவர் இந்த பாடலை பாடவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் அவரது குரலை செயற்கை நுண்ணறிவு துணையுடன் வாய்ஸ் குளோனிங் செய்து, அதனை சாத்தியம் செய்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

மோடியின் தமிழ் பாடல்கள் கேட்க இணைப்பு 

https://www.youtube.com/watch?v=5M3yMcfAu4A

மெலடி, கானா, பக்தி என பல பாடல்களை பிரதமர் மோடி குரலில் குளோன் செய்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் ‘பார்த்தேனே உயிரின் வழியே' என்ற பாடல், உயிரே படத்தில் வரும் ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ என்ற பாடல், கேளடி கண்மணி படத்தில் வரும் ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடல், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல், மற்றும் கானா பாடல் என பல்வேறு பாடல்களை பிரதமர் மோடி குரலில் குளோன் செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ வானொலி உரை தமிழில் எப்படி இருக்கும் என்பதையும் வாய்ஸ் குளோனிங் மூலம் ரி-கிரியேட் செய்துள்ளனர். அதை தமிழில் கேட்கும் போது இனிமையாக  உள்ளது.

மேலும், 90-களின் வானொலி அறிவிப்பாளர்களை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. இதே போல பிரபல பின்னணி பாடகர்கள், தங்கள் திரை வாழ்வில் பாட தவறிய பாடல்களை பாடி இருந்தால், அது எப்படி இருக்கும் என்பதையும் வாய்ஸ் குளோன் செய்து பகிர்ந்துள்ளனர் கிரியேட்டர்கள்.

வரும் நாட்களில் பல்வேறு பிரபலங்களின் குரலை இந்த வாய்ஸ் குளோனிங் முறையில் கேட்கலாம் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News