ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ள சிறப்பு பிரீபெய்டு திட்டங்கள் என்ன தெரியுமா?
ஐந்து திட்டங்களும் தினசரி DATA அளவு இல்லாமல் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
Reliance Jio தனது வாடிக்கையாளர்களுக்கு தினசரி DATA அளவு, வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் இருக்கும் அனைத்து பிராண்டுகளையும் கீழிறக்கி முதலிடத்தில் உள்ளது. பயனர், முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வணிக செயல்திறன் உள்ளிட்டவற்றின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக இந்த நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் 15 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐந்து திட்டங்களும் அவற்றின் செல்லுபடியாகும் காலங்களுக்கு தினசரி DATA அளவு இல்லாமல் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ரூ.127ற்கு 15 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டம் 12 ஜிபி தொகுக்கப்படாத தினசரி தரவை வழங்குகிறது. அடுத்த திட்டம் ரூ.247 க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி FUP வரம்பு இல்லாமல் 25 ஜிபி தரவைக் கொண்டு வருகிறது. மேலும் ரூ.447 திட்டம் மூலமாக 50 ஜிபி தரவுடன் 60 நாட்கள் செல்லுபடியாகும். 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம் ரூ.2,397 ஆகும். அவை 365 ஜிபி டேட்டாவுடன் வரும்.