SBI வங்கியின் புதிய அறிமுகம் ஹோம் டெலிவரி முறையில் சேவை

Update: 2021-06-12 02:37 GMT

பாரத ஸ்டேட் வங்கி 

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பலரும் வங்கிகளுக்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், SBI வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் டெலிவரி முறையில் சேவைகளை வழங்குகிறது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த இக்கட்டான காலத்தில் மக்கள் தங்களது தேவைகளுக்காக வங்கிகளில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளில் எவ்வித குறைவும் இருக்கக்கூடாது என கருதிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), டோர் டெலிவரி சேவைகளை மீண்டுமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான SBI, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த டோர் ஸ்டெப் பேங்கிங் சேவையை வழங்கி வருகிறது. அதன் படி கேஷ் பிக்கப், கேஷ் டெலிவரி, செக் பிக்கப், ஃபார்ம் 15 ஹெச் பிக்கப், டிராஃப்ட் டெலிவரி, ஆயுள் சான்றிதழ் பிக்கப் மற்றும் KYC டாக்குமெண்ட் பிக்கப் உள்ளிட்ட சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த சேவைகள் 70 வயதுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் படி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் அவரது மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்து, KYC சரியாக இருந்தால் இச்சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் வங்கிக்கணக்கு வைத்துள்ள கிளையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சேவைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவையின் படி ஒருவர் ஒரு நாளில் ரூ.20,000 வரை மட்டுமே கேஷ் டெபாசிட், கேஷ் வித்டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News