மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த சில தினங்களாக பல புதிய அம்சங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அதன் லோகோ வண்ணத்தை மாற்ற உள்ளது. அதன்படி விரைவில் வாட்ஸ் ஆப் லோகோ போன்றவை நீல நிறத்தில் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
பிரபல வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் தொடர்ந்து பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வாய்ஸ் மெசேஜ் பிரிவியூ, வியூ ஒன்ஸ் போன்ற பல அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அவை அனைத்தும் பயனர்களிடம் மத்தியில் அதிக வரவேற்பு மற்றும் உற்சாகமடைய செய்து வருகிறது. தற்போது இதனை தொடர்ந்து மேலும் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.
அந்த வகையில் வாட்ஸ் ஆப் லோகோ, பேட்ஜ், ரிப்ளை, மற்றும் மார்க் அஸ் ரிப்ளை ஆகிய அம்சங்கள் Dark mode இன் போது நீல நிறத்தில் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் பீட்டாவின் புதிய வெர்சன் 2.21.12.12ல் இந்த வண்ண மாற்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த அப்டேட் மூலம் வாட்ஸ் ஆப் நோட்டிபிகேஷன் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனாளர்களுக்கும் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அப்டேடாக பீட்டா வெர்சன் v2.21.21.7ல் வாட்ஸ் ஆப் பிளாஷ் கால் என்னும் அம்சம் இடம்பெற்றுள்ளது. பொதுவாக வாட்ஸ் ஆப் பயனர்கள் புதிய சாதனங்களில் தங்களது வாட்ஸ் ஆப் கணக்கை லாக் இன் செய்ய வேண்டும் எனில் அதற்கு போன் நம்பர் பதிவு செய்து, ஓடிபி பதிவு என்று பல வழிமுறை உண்டு. தற்போது இதனை எளிமையாக்குவதற்கு இந்த பிளாஸ் கால் என்னும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் ஆப், பயனர்கள் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்து சில நொடிகளில் அதுவாகவே அழைப்பை முடித்துக்கொள்ளும். பின்பு பயனர்கள் தொலைபேசியின் பதிவின் கடைசி தொலைபேசி எண் 6 இலக்க குறியீட்டை பயனர்களுக்கு வழங்கும். இதன் மூலம் பயனர்கள் எண் சரிபார்க்கப்படும். இது பயனர்கள் கணக்கை பாதுகாக்க உதவும் என்றும் இதனை எளிதாக ஏமாற்ற முடியாது என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.