சனி கிரக நிலவுக்கு பாம்பு ரோபோவை அனுப்பும் நாசா

NASA developing snake-like robot - சனி கிரக நிலவுக்கு பாம்பு ரோபோவை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.;

Update: 2023-05-08 10:29 GMT

NASA, Jet Propulsion Laboratory - சனி கிரக நிலவுக்கு பாம்பு ரோபோவை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

NASA developing snake-like robot

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கிய பாம்பு போன்ற ரோபோவான எக்ஸோபயாலஜி எக்ஸ்டான்ட் லைஃப் சர்வேயர் (ஈஇஎல்எஸ்) பூமிக்கு அப்பால் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விண்வெளி ஆய்வுக்கு உதவ உள்ளது. ஈஇஎல்எஸ் எனப்படும் பாம்பு ரோபோ, குறிப்பாக சனி கிரகத்தின் 83 நிலவுகளில் ஒன்றான என்செலடஸை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் நிலவில் உள்ள பனிக்கட்டி அம்சங்களை ஆராய்ந்து அதன் மேற்பரப்பில் நீர் மற்றும் உயிர்வாழும் நிலைமைகளின் சாத்தியக்கூறுகளை அது கண்டுப்பிடிக்க உள்ளது.


snake-like robot, Saturn, EELS, Saturn moon

பாம்பு ரோபோ என்பது நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் கருவி தளமாகும். இது நிலம், நீர் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பயணிக்க ஏதுவாக இது தன்னை மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘என்செலடஸ்’ என்பது சனியின் ஆறாவது பெரிய நிலவாகும். மேலும் அதன் பனிக்கட்டி மேற்பரப்பு ஒப்பீட்டளவில் மென்மையானது. வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே 300 டிகிரி பாரன்ஹீட் வரை குறைகிறது. அதன் பனிமூட்டமான மேற்பரப்பிற்கு அடியில் பெரிய அளவில் நீர் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். காசினி விண்கலத்தின் தரவுகள் அதன் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் திரவ நீர் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Exobiology Extant Life Surveyor, Enceladus

எனவே இந்த பாம்பு வடிவிலான ஈஇஎல்எஸ் எனப்படும் ரோபோ, சனி கிரகத்தின் நிலவில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை இன்னும் ஆழமாக ஆராய்வதற்காக அனுப்பப்படுகிறது. மேலும் சனி கிரகத்தின் வெளி வட்டங்கள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. இதனை ஆராயவும் இந்த பாம்பு ரோபோ அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

Cassini, life away from earth, nasa robot, life on saturn

நாசா இன்னும் இந்த திட்டத்திற்கான வெளியீட்டு தேதியை திட்டமிடவில்லை என்றாலும், வெற்றி பெற்றால், அது ஒரு காலத்தில் அடைய முடியாததாக கருதப்பட்ட வான் உலகின் இன்னும் ஆழமான ஆய்வுக்கு வழிவகுக்கும். 16-அடி நீளமுள்ள ரோபோ, முன்னர் அணுக முடியாத பகுதிகளுக்கு அணுகலை வழங்குவதன் மூலமும், வேற்று கிரக வாழ்க்கையின் சாத்தியக்கூறுகளைக் கண்டறிவதன் மூலமும் விண்வெளி ஆய்வில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.

Tags:    

Similar News