இந்த நவம்பர்ல கார் விற்பனைல யார் டாப்ல இருக்கானு பாக்கலாம் வாங்க

இந்த வருடம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்வாகைகளில் குறிப்பிடத்தக்க கார்கள் அதிகம் விற்பனையாகி உன்னன அதில் முக்கியமான சிலவற்றை நாம் காண்போம்;

Update: 2024-12-09 05:00 GMT


2024 நவம்பரில் இந்தியாவின் டாப் 5 கார்கள் body { font-family: Arial, sans-serif; line-height: 1.6; margin: 0; padding: 0; } .container { max-width: 800px; margin: 0 auto; padding: 20px; } h1 { background-color: #1565C0; color: #ffffff; padding: 20px; margin: 0; text-align: center; font-size: 24px; } h2 { font-size: 22px; margin-top: 30px; } table { width: 100%; border-collapse: collapse; margin-bottom: 20px; } th, td { border: 1px solid #dddddd; padding: 8px; text-align: left; } th { background-color: #f2f2f2; } img { max-width: 100%; height: auto; display: block; margin: 20px auto; }

2024 நவம்பரில் இந்தியாவின் டாப் 5 கார்கள்

அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கார், பைக் போன்ற வாகனங்களின் விற்பனை அதிகமாக இருந்தது. காரணம், அக்டோபரில் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் அதிகம் இருந்தது. மேலும், மூகூர்த்த தினங்களும்அதிகம் இருந்தன. ஆனால், அதற்கு நேர்மாறாக கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த மாதத்தை விட குறைவான வாகனங்கள் விற்பனையாகியிருந்தாலும் கடந்தாண்டு நவம்பரை ஒப்பிடும்போது கடந்த 2024 நவம்பரில் கார்கள் அதிகமாகவே விற்றுள்ளன.

2024 நவம்பர் vs 2023 நவம்பர்

கடந்த 2023 நவம்பரில் 1,34,254 கார்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு நவம்பரில் 1,48,882 கார்கள் விற்பனையாகி உள்ளன. அதாவது, கடந்தாண்டை விட இந்தாண்டு 14 ஆயிரத்து 628 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. அதாவது, வருடாந்திர வளர்ச்சி 10.90% ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5. Maruti Ertiga

இந்தாண்டு நவம்பரில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியின் Ertiga மாடல் 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு 15 ஆயிரத்து 150 கார்களும், கடந்தாண்டு நவம்பரில் 12 ஆயிரத்து 857 கார்களும் விற்பனையாகி உள்ளன. அதாவது, வருடாந்திர வளர்ச்சி 17.83 ஆக இருந்துள்ளது.

4. Tata Nexon

டாடா நிறுவனத்தின் Nexon மாடல்தான் அதிக விற்பனையான கார்களின் டாப் 5 பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு நவம்பரில் 15,329 கார்களும், கடந்தாண்டு நவம்பரில் 14,916 கார்களும் விற்பனை ஆகியுள்ளன. இதில் EV மாடலும் அடக்கம். கடந்தாண்டு விட இந்தாண்டு வெறும் 413 கார்களே அதிகமாக விற்றுள்ளது. இதன் வருடாந்திர வளர்ச்சியும் 2.77% ஆக உள்ளது.

3. Tata Punch

டாடா நிறுவனத்தின் Punch மாடல் இந்தாண்டு நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு நவம்பரில் 15,435 கார்களும், இந்தாண்டு 14,383 கார்களும் விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டு விட 1,052 கார்கள் அதிகம் விற்றுள்ளது. இதிலும் EV மாடலும் அடக்கம். இதன் வருடாந்திர வளர்ச்சி 7.31% ஆக உள்ளது.

2. Hyundai Creta

ஹூண்டாய் நிறுவனத்தின் Creta கார்தான் இந்த நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்களின் பட்டியில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் 11,814 கார்களே விற்பனையான நிலையில், இந்தாண்டு நவம்பரில் 15 ஆயிரத்து 432 கார்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது சுமார் 3,638 கார்கள் கடந்தாண்டு விட அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதாவது இந்த காரின் வருடாந்திர வளர்ச்சி 30.79% ஆக உள்ளது.

1. Maruti Baleno

2024 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிக விற்பனையான கார் என்றால் அது மாருதி சுசுகி நிறுவனத்தின் Baleno மாடல்தான். இந்தாண்டு நவம்பரில் 16,293 கார்களும், கடந்தாண்டு நவம்பரில் 12,961 கார்களும் விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்தாண்டை விட இந்தாண்டு 3,332 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. அதாவது இதன் வருடாந்திர வளர்ச்சி 25.71% ஆக உள்ளது.

முடிவுரை

2024 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களின் கார்களே முதல் 5 இடங்களில் உள்ளன. இதில் மாருதி பலேனோ முதலிடத்தையும், ஹூண்டாய் க்ரெட்டா 2வது இடத்தையும், டாடா பஞ்ச் மற்றும் நெக்ஸான் 3 மற்றும் 4வது இடத்தையும், மாருதி எர்டிகா 5வது இடத்தையும் பிடித்துள்ளது.


Tags:    

Similar News