ஜியோ 5ஜி சேவை மேலும் 16 நகரங்களில் அறிமுகம்
நாடு முழுவதும் மேலும் 16 நகரங்களில் 5ஜி (True 5G) சேவைகளை அறிமுகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மேலும் 16 நகரங்களில் 5ஜி (True 5G) சேவைகளை அறிமுகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்தது. இந்த சேவையைப் பெற்றுள்ள மொத்த நகரங்களின் எண்ணிக்கை இப்போது 134 ஆக உள்ளது.
இந்த நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்படுவார்கள். இன்று முதல் கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க முடியும் என்று நிறுவனத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில், காக்கிநாடா மற்றும் கர்னூல் இப்போது ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளுக்கான அணுகலைப் பெற்றுள்ளது. அதேசமயம் கர்நாடகாவின் தாவணகெரே, ஷிவமொக்கா, பிதார், ஹோஸ்பேட் மற்றும் கடக்-பேட்டகேரி ஆகிய நகரங்களும் தற்போது சேவைகளைப் பெறுகின்றன.
கேரளாவில், மலப்புரம், பாலக்காடு, கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகியவை True 5G அணுகலைப் பெறும் புதிய நகரங்களாகும், அதே நேரத்தில் அசாமில் உள்ள சில்சார் சேவைகளும் நேரலையில் உள்ளன. ஜியோ தனது 5ஜி சேவையையும் தமிழ்நாட்டில் திருப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் மற்றும் கம்மம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி ஆகிய நகரங்களும் ஜியோ 5ஜி சேவைகளை பெற்றுள்ளன.
ஜியோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏழு மாநிலங்களில் கூடுதலாக 16 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். மொத்த எண்ணிக்கையை 134 நகரங்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். நாடு முழுவதும் ட்ரூ 5ஜி வெளியீட்டின் வேகத்தையும் தீவிரத்தையும் நாங்கள் அதிகரித்துள்ளோம். 2023 புதிய ஆண்டில் ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த புதிய ட்ரூ 5ஜி நகரங்கள் முக்கியமான சுற்றுலா, வர்த்தக இடங்கள் மற்றும் நமது நாட்டின் முக்கிய கல்வி மையங்கள் என்று அவர் கூறினார்.
ஜியோவின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், பிராந்தியத்தின் நுகர்வோர் சிறந்த தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், மின்-ஆளுமை, கல்வி, ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் எல்லையற்ற வளர்ச்சி வாய்ப்புகளையும் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.