உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த APPகள் இருக்கா? – உடனே நீக்கிடுங்க, இல்லைன்னா அவ்வளவுதான்!

Dangerous apps in google play store - ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தப்படும் APPகள் அல்லது செயலிகளின் மூலம் பயனர்களின் தகவல்கள் சட்டவிரோத முறையில் ஹேக்கர்களின் மூலம் திருடப்படுகின்றன.

Update: 2022-07-21 12:19 GMT

Dangerous apps in google play store - உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த APPகள் இருக்கா? – உடனே நீக்கிடுங்க, இல்லைன்னா அவ்வளவுதான்!

Dangerous apps in google play store - மனிதனின் ஆறாவது புலனுறுப்பாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது என்றுதான் நாம் கூற வேண்டும். அந்தளவிற்கு நம் வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருளாக அது மாறிவிட்டது. ஸ்மார்ட்போனின் உதவியால், நாம் பல தொழில்நுட்ப அம்சங்களை உடனுக்குடன் பெற்று வந்தாலும், அதன்மூலமான பல்வேறு மோசடி நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தப்படும் APPகள் அல்லது செயலிகளின் மூலம் பயனர்களின் தகவல்கள் சட்டவிரோத முறையில் ஹேக்கர்களின் மூலம் திருடப்படுகின்றன. இதன்மூலம் நமது அந்தரங்க தகவல்கள், நிதி தொடர்பான தகவல்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டு உள்ளன. இதுபோன்ற அச்சுறுத்தலை தரக்கூடிய செயலிகளை 3 லட்சத்துக்கும் அதிக முறை பல அப்பாவி பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளதாக தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

Dangerous apps in google play store -மால்வேர்கள் இடம்பெற்றிருக்கும் இத்தகைய செயலிகளை நமது ஸ்மார்ட்போன்களின் நிறுவுவதன் மூலம், சைபர் கிரிமினல்கள் பயனாளர்களின் தரவுகளை திருடி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் வேலையில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் எஸ்எம்எஸ் மூலம் உள்புகுந்து, பல்வேறு பிரீமியம் சேவைகளின், பயனாளர்களுக்கே தெரியாமல் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளும் அபாயம் உள்ளது.

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள

Simple Note Scanner

Univesal PDF Scanner

Private Messanger

Premium SMS

Smart Messages

Text Emoji SMS

Blood Pressure Checker

Funny Keyboard உள்ளிட்ட செயலிகளை, அபாயகரமான செயலிகளாக அறிவித்து உள்ளது.

Dangerous apps in google play store - ஸ்மார்ட்போன் பயனாளர்களே, இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால், உடனடியாக அதனை நீக்கி விடுங்கள், அபாயத்திலிருந்து விடுபடுங்கள்....

Tags:    

Similar News