தினசரி 5.80 கோடி செலவு, சாட் ஜிபிடி 2024 இல் திவாலாகலாம்: அறிக்கை
ஓபன்ஏஐ அதன் AI சேவைகளில் ஒன்றான ChatGPTஐ மட்டும் இயக்க ஒவ்வொரு நாளும் $700,000 (ரூ. 5.80 கோடி) செலவாகிறது என்று அறிக்கை கூறுகிறது.
சாம் ஆல்ட்மேன் தலைமையிலான AI ஸ்டுடியோவான OpenAI ஆனது சாத்தியமான நிதி நெருக்கடியின் விளிம்பில் இருக்கலாம் . 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்நிறுவனம் திவாலாகிவிடும் என்று , அனலிட்டிக்ஸ் இந்தியா இதழின் அறிக்கை கூறுகிறது.
நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வரலாற்றில் வேகமாக வளர்ந்து வரும் செயலியாக ChatGPT ஆனது. ஆனால் அதன் ஆரம்ப கட்டங்களில் பயனர்களின் பதிவு முறியடிக்கும் வருகைக்குப் பிறகு, நிறுவனம் சமீபத்திய மாதங்களில் பயனர் ஈடுபாட்டில் படிப்படியாக சரிவைக் காண்கிறது. ஜூலை இறுதிக்குள் ChatGPT இன் பயனர் தளம் மேலும் குறைந்துவிட்டது
ஜூலை 2023 இல், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது பயனர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளது, இது 1.7 பில்லியன் பயனர்களில் இருந்து 1.5 பில்லியன் பயனர்களாகக் குறைந்துள்ளது
ஓப்பன் ஏ.ஐ., கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில் தகவல்களை தேடி திரட்டுவதை விட மிக எளிதாக, சாட்ஜிபிடியை பயன்படுத்தி, ஒருவர் தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற முடியும்.
அத்துடன் கட்டுரைகள் கடிதங்கள் போன்றவற்றை தயாரிக்கவும் இவை மிகவும் உதவியாக இருக்கும். இதையடுத்து இதற்கு உலகளவில் மிக பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது, ஓப்பன் ஏ.ஐ., நிறுவனம், 2024ம் ஆண்டுக்குள் திவால் ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சாட்ஜிபிடியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஜூன் மாதம் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை 170 கோடியாக இருந்தது. ஜூலையில், 150 கோடியாக குறைந்து உள்ளது. ஓப்பன் ஏ.ஐ., சாட்ஜிபிடிக்கு வர்த்தக முத்திரை கோரியதால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
மெட்டா சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க் அறிமுகப்படுத்திய 'லாமா 2' சாட்பாட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அதன் கூட்டாளராக நியமித்துள்ளது. இது விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தபட உள்ளது. மேலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது, சாட்ஜிபிடிக்கு கடும் போட்டியாக இருக்கக்கூடும்
சாட்ஜிபிடி செயல்படுவதற்கு, ஓப்பன் ஏ.ஐ., நிறுவனம், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5.81 கோடி ரூபாய் செலவு செய்கிறது. மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இதற்கு முதலீடு செய்கின்றனர். லாபம் குறைந்தால், முதலீட்டாளர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது
ஓப்பன் ஏ.ஐ., நிறுவனம், 2024ம் ஆண்டுக்குள் 8,300 கோடி ரூபாய் வருவாயை எட்டும் என்று கணித்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம், இந்நிறுவனத்தின் இழப்பு 4,480 கோடி ரூபாயாக இருந்தது. இழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், வளர்ச்சி கேள்விக் குறியாக உள்ளது
இத்தகைய சவால்களுக்கு மத்தியில், நிறுவனம் லாபம் ஈட்டுவது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், 2024ம் ஆண்டுக்குள், ஓப்பன் ஏ.ஐ., நிறுவனம் திவாலாகக்கூடும்