அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த குட் நியூஸ்..!AI எப்டி யூஸ் பண்ணனும்னு சொல்லித்தர ஆன்லைன் கிளாஸ் எடுக்குறாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் குறுகிய கால ஏஐ பயிற்சி அளிக்கப்படவுள்ளது.அதற்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்ற முழு விவரங்களை இங்கு காணலாம்.;
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பல்வேறு துறைகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் AI பயிற்சிகளை வழங்கி, தொழில் வல்லுநர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன.தொழில் செய்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பெரிதளவில் உதவும் என கூறப்படுகிறது.
பல மணி நேர வேலையை ஏஐ தொழில்நுப்டம் மூலம் எளிதில் முடிக்க முடியும் என்பது பலரை கவர்கிறது. இந்த வளர்ச்சி ஏற்ற வகையில் தொழில்முனைவோர்கள் இதனை அறிந்துகொள்ளும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் 45 நாட்களுக்கு ஆன்லைன் வழியாக ஏஐ பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தொழில் செயற்கை நுண்ணறிவு
கல்வி, மருத்துவம் உட்பட வங்கி, வரத்தம், மார்க்கெட்டிங், தொழிற்சாலை என பல்வேறு முன்னணி பொருளாதார வர்த்தக துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உபயோகம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், செய்றகை நுண்ணறிவு தொழிலில், டேட்டா ஆய்வு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் உதவுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் AI ஆன்லைன் பயிற்சி
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் Times Higher Education தலைசிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்களில் தரவரிசையில் இந்தியாவில் முதல் இடத்தையும், உலகளவில் 42வது இடத்தையும் பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் AI ஆன்லைன் பயிற்சி, தொழில் வல்லுநர்கள் தங்களது தொழிலில் AI-யை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த பயிற்சியில், நீங்கள் பின்வரும் திறன்களை கற்கலாம்:
Machine Learning: தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு முடிவுகளை எடுக்கும் அல்காரிதம்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
Deep Learning: நரம்பியல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சனைகளை தீர்க்கும் முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
Natural Language Processing (NLP): மனித மொழியை கணினிகள் புரிந்துகொள்ள வைக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
Computer Vision: படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து தகவல்களை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
ஆன்லைன் வழியாஅக் ஏஐ - இன்வோவேட்டிங் புரோடக்ட் டெவெலப்மெண்ட் இண்டர்ன்ஷிப்ஸ் பயிற்சி 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் டேட்டா சயின்ஸ், டேட்டா அனலெட்டிக்ஸ், புல்ஸ்டாக் டெலெலப்மெண்ட், பிசினஸ் இண்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஜென் ஏஐ, புராம்ட் இன்ஜினியரிங், சாட்ஜிபிடி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7AITHb4HwgHMsMDR8xygp5OeMRNJcpc7WMbpDPpLmL0txtA/viewform என்ற கூகுள் படிவத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவலுக்கு https://www.annauniv.edu/ என்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு cedau.outreach@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், 044 22359287/89 ஆகிய தொலைப்பேசி முகவரிலும் அறிந்துகொள்ளலாம்.