வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இனி உங்க கண்ட்ரோல்ல... வருகிறது புதிய அம்சம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் யாரெல்லாம பார்க்கலாம் என்பதை நீங்களே கண்ட்ரோல் செய்ய விரைவில் புதிய அம்சம் வருகிறது;

Update: 2022-02-24 02:07 GMT

ஸ்டேட்டஸ் தனியுரிமை அமைப்புகளுக்கான புதிய ஷார்ட்கட் அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது வளர்ச்சி கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் உருவாக்கத்தில் இருப்பதால் பீட்டா பயனர்களுக்கு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப் தளங்கள் தங்கள் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. ஸ்டேட்டஸ் என்பது பயனர்களால் பரவலாகப்பயன்படுத்தப்படும் பிரதான அம்சம் ஆகும். இந்த அம்சம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஸ்டேட்டஸ் அம்சத்தை பயனர்களின் தனியுரிமைக்கு ஏற்றதாக மாற்ற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூகவலைதளமான வாட்ஸ்அப்., கூகுள் ப்ளே பீட்டா புரோகிராம் மூலம் ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்திய பதிப்பை 2.22.6.2 என கொண்டு வருகிறது. இந்த புதுப்பிப்பின் மூலம் உங்கள் ஸ்டேட்டஸை யார் பார்க்கலாம் என்பதை நிர்வகிப்பதற்கான புதிய சார்ட்கட் ஆகும். இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது.

தனியுரிமை அமைப்புகளுக்கான ஷார்ட்கட்டை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் யார் தங்கள் ஸ்டேட்டஸை பார்க்க முடியும் மற்றும் யார் முன்னதாகவே தங்கள் ஸ்டேட்டஸை பார்க்க முடியாது என்பதுபோல் இல்லாமல், ஒவ்வொரு முறையும் தங்கள் ஸ்டேட்டஸ்ன் தனியுரிமை அமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. இருப்பினும் WABetaInfo அறிக்கையின்படி, ஸ்டேட்டஸ் தனியுரிமை அமைப்புகளுக்கான புதிய ஷார்ட்கட் அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் வளர்ச்சி கட்டத்தில் உள்ளது எனவும் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் உருவாக்கத்தில் இருப்பதன் காரணமாக பீட்டா பயனர்களால் கூட தங்கள் பயன்பாட்டில் அதை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்கள் ஒவ்வொரு புதிய ஸ்டேட்டஸை பதிவிடும் போதெல்லாம் குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து தங்கள் நிலையை மறைக்கும் விருப்பத்தை பெறுவார்கள். இது ஒரு சிறந்த அம்சமாகவே கருதப்படுகிறது. பீட்டா பயனர்களுக்கு இது இன்னும் கிடைக்கவில்லை, நிறுவனம் இதன் உருவாக்கப் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட முயற்சிக்கும் போதெல்லாம் டிஸ்ப்ளேயின் அடிப்பகுதியில் கேப்ஷன் பார் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாட்ஸ்அப் புதுப்பித்தலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில், பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு உட்பட சில குறிப்பிடத்தக்க அம்சங்களை நிறுவனம் அதன் தளத்தில் சேர்த்தது. வாட்ஸ்அப் ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய குறுஞ்செய்தி பயன்பாடாகும். ஆனால், அது வரும் அம்சங்களை பற்றி அனைவருக்கும் தெரியாது. வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் உண்மையில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், லேப்டாப்பில் அதிக நேரம் செலவழிக்கும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் Windows / Mac இல் இயங்கும் வாட்ஸ்அப்பை நீங்கள் நிறுவி இருந்தால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் இனி உங்களின் மடிக்கணினிகளில் இருந்தே நீங்கள் நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புகளை பயன்படுத்தலாம்.

உங்களிடைய வாட்ஸ்அப் குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு இரண்டையும் தான். இனி உங்கள் போன் அருகில் இல்லாவிட்டாலும் லேப்டாப் மூலம் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு மற்றும் வீடியோ கால்ஸ் அழிப்புகளில் கலந்துகொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சேர்த்துள்ளது. இந்த அம்சம் அழைப்புகளை பெற தொலைபேசியை தேடுவதில் இருந்து விடுவிக்கிறது. 

Tags:    

Similar News