தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா?

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க திட்டம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update: 2024-10-19 04:32 GMT

தீபாவளி- கோப்பு படம் 

வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மறுநாள் நவம்பர் முதல் தேதி வெள்ளிக்கிழமை. நவம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இடையில் ஒரு நாள் மட்டும் வெள்ளிக்கிழமை அலுவலகம் வைத்தால், தீபாவளிக்கு வெளியூர் சென்று திரும்புபவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். அதேநேரம் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை கொடுத்தால், தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் தீபாவளி பண்டிகை கொண்டாட நீண்ட துாரம் பயணிப்பவர்களுக்கு மிகுந்த வசதி ஏற்படும்.

எனவே தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளன. வழக்கம் போல் அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கத்  தொடங்கி உள்ளது. இந்த கோரிக்கையில் நியாயமான காரணங்கள் இருப்பதால் விடுமுறை விடப்பட வேண்டும் என அரசை வலியுறுத்துவதாக பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

இதே போலவே கடந்த ஆண்டு தீபாவளி  ஞாயிறு அன்று வந்ததால், வெளியூர்களில் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்ப வசதியாக  தமிழக அரசு திங்கட்கிழமையை விடுமுறையாக அறிவித்து 28ம் தேதி சனிக்கிழமையை வேலைநாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News