டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கின்றன? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.!

Why Tyre Colour is Black - டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கின்றன என்ற அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு

Update: 2022-06-08 05:00 GMT

Why Tyre Colour is Black - டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கின்றன? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.!

சில ஆண்டுகளுக்கு முன்பு டயர்கள் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டன. இதற்கு காரணம் டயர்கள் தயாரிக்கப் பயன்படும் ரப்பர் பால் நிறத்தில் இருக்கும். பிறகு சாலை களில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு வெள்ளை டயரில் பயன்படுத்தும் ரப்பர் வலுவாக இல்லை.அதன் பிறகு தான் கருப்பு டயர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கருப்பு டயர்களின் வலிமை மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்க ஒரு நிலைப்படுத்தும் மூலப்பொருள் தேவைப்படு கிறது. அந்த மூலப்பொருள் கார்பன் கருப்பு தூள். இது ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய கார்பன் தூள் ஆகும்.

காற்றில் ஹைட்ரோ கார்பன்களை எரிப்பதன் மூலம் இந்த கார்பன் கருப்பு தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த தூளை சேர்ப்பதால் டயர் முற்றிலும் கருப்பு நிறமாக மாறும். டயரின் ஆயுளையும், வலிமையையும் மேம்படுத்த இந்த கார்பன் கருப்பு தூள் உதவுகிறது. மேலும் கார்பன் கருப்பு தூள் ஆட்டோமொபைலின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் வெப்பத்தை எடுத்து செல்கிறது. அதனால்தான் சாலையில் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் டயர் சாலையில் உராயும்போது உண்டாகும் வெப்பம் ஆகியவற்றினால் டயர்கள் உருகாமல் உறுதியாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் கார்பன் கருப்பு தூள் ஓசோன் மற்றும் புற ஊதா கதிர்வீச்சின் மூலம் உண்டாகும் தீங்கு விளைவுகளி லிருந்து டயர்களை பாதுகாக்க உதவுகிறது. ஒரு வாகனத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் டயர்களும் ஒன்றாகும். ஏனெனில் அவை மட்டுமே சாலை மேற்பரப்புடன் இணைகின்றன. எனவே, டயர் நீடித்து உழைப்பதுடன், நீண்ட நாள் உத்தரவாதம் அளிப்பதும் முக்கியமானது. இதற்காகவே கார்பன் கருப்பு என்ற மூலப்பொருள், டயர் தயாரிப்பில் தேவைப்படுகிறது.  இதன் காரணமாக டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News