ரயில் சேவைகள் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கடம்பூர் யார்டு பகுதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
விருதுநகர் மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் நடிபெறும் சுரங்கப்பாதை பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மனி முதல் மாலை 5 மணி வரை சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம். மேலும், 12 ரயில்கள் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
- ஈரோடு - நெல்லை விரைவு ரயில் (16845) நாளை மறுநாள் திண்டுக்கல் - நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- நெல்லை - ஈரோடு விரைவு ரயில் (16846) ஜூன் 13ல் நெல்லை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
- கோவை - நாகர்கோவில் விரைவு ரயில் (16322) ஜூன் 13ல் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
- நாகர்கோவில் - கோவை விரைவு ரயில் (16321) 13ல் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.
- பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731)ஜூன் 13ல் திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
- திருச்செந்தூர் - பாலக்காடு சந்திப்பு விரைவு ரயில் (16732) ஜூன் 13ல் திருச்செந்தூர் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.
- திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (22627) ஜூன் 13ல் விருதுநகர் - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் (22628) விரைவு ரயில் ஜூன் 13ல் திருவனந்தபுரம் விருதுநகர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.
- மைசூரு - தூத்துக்குடி விரைவு ரயில் (16236) நாளை மறுநாள் விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- தூத்துக்குடி - மைசூரு விரைவு ரயில் (16235) ஜூன் 13ல் தூத்துக்குடி - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (26691) நாளை மறுநாள் திருச்சி - நாகர்கோவில் சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் ரயில் சேவை பாதையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி , குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (16128) 12ம் தேதி நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியே எழும்பூர் செல்லும்.