ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உடல் நலக்குறைவால் காலமானார்;
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மாதவராவ் போட்டியிட்டார். தீவிரமான பிரசாரத்தோடு பயணம் மேற்கொண்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் பிரச்சார பயணம் செய்ய முடியாமல் போனது. இதனால் மதுரையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை மாதவராவ் உயிரிழந்தார். அவருடைய மறைவால் அவரது குடும்பத்தினரும் , தொகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.