விருதுநகரில் பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
விருதுநகரில் முன் விரோதம் காரணமாக பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்;
விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொது செயலாளராக இருப்பவர் சக்திவேல். இன்று காலை வழக்கம்போல் வடமலைக்குறிச்சி ரோட்டில் சைக்கிளிங் செல்லும்போது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் சக்திவேல் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்கினர். இதில் நல்வாய்ப்பாக சக்திவேல் உயிர் தப்பினார்.
இதனையடுத்து சக்திவேல் மற்றும் பாஜகவினர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் மனு அளித்தனர்.
பாவாலியில் மசூதி கட்டுவது தொடர்பாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.