விருதுநகர் மாவட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விருதுநகர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-04-28 05:22 GMT

விருதுநகர் மாவட்ட ஒப்பந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் சங்கம் சார்பாக கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் தற்பொழுது கோழி வளர்ப்பு கூலியாக ஒரு கிலோவிற்கு ரூபாய்.6.50 வீதம் கோழி உற்பத்தியாளர்கள் தருகிறார்கள்.

தற்பொழுது உள்ள விலைவாசி உயர்வால் அவர்கள் தருகின்ற கோழி வளர்ப்பு கூலி எங்களுக்கு போதுமானதாக இல்லை. அதனால் ஒரு கிலோவிற்கு ரூபாய் 15 வீதம் கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் இல்லாத பட்சத்தில் வரும் 29ம் தேதி முதல் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

பின்பு கோழி வளர்ப்பு பணியாளருக்கு தனி வாரியம் தமிழக அரசு அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் மனு அளித்தனர்.

Similar News