ஊழல் பட்டியல் வெளியிட்டவர்களோடு கூட்டணி : உதயநிதி கிண்டல்
ஊழல் பட்டியல் வெளியிட்டவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர் என்று அ.தி.மு.கவை உதயநிதி தேர்தல் பிரசாரம்
திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காரியாபட்டி பகுதியில் வேன் பிரச்சாரம் மே்கொண்டார் அப்போது பேசிய உதயநிதி,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எப்படி வெற்றிபெற செய்தீர்களோ அதேபோல இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றிபெற செய்யவேண்டும். ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோடி அது போல, அவர்களை செல்லா காசாக மாற்ற வேண்டும்.
தமிழகத்திற்கு சேரவேண்டிய 15000 கோடி ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. கேட்டால் பணம் இல்லை என்று கூறினார்கள். ஆனால், பிரதமர் மோடி ஊர் சுற்ற 8000 கோடியில் விமானம் வாங்கப்படுள்ளது.
ஊழல் பட்டியல் வெளியிட்டவர்களோடு இன்று கூட்டணி வைத்துள்ளனர். அதிமுக வுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பிஜேபி க்கு போடும் ஓட்டு. இந்த பகுதியில் நூலகம் அமைத்தது, ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவந்தது, குடிநீர் பிரடச்சனையை தீர்த்தது தங்கம் தென்னரசு அவர்கள். கொரோனா காலத்தில் 44 மருத்துவர்கள் இறந்ததாக நான் கூறினேன். அதற்கு என் மீது வழக்கு போட உள்ளதாக அரசு கூறியது. ஆனால், அரசு சில நாட்களில் அது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டது.
கொரோனா காலத்தில் ஊழல் செய்த அரசு இது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை, சமையல் எரிவாயு கூடுதல் ரூ.100 மானியம் உள்ளிட்டவை திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று உதயநிதி கூறினார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உடனிருந்தார்.