விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 444 பேருக்கு கொரோனோ
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 444 பேருக்கு புதிதாக கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேற்று வரை 23,130 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 444 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 23,574 ஆக உயர்ந்துள்ளது
இதுவரை 20,932 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2376 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 97 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 266 பேர் உயிரிழந்துள்ளனர்.