டாஸ்மாக் மீது இருக்கும் அக்கறை பள்ளிகள் மீது இல்லை :அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
தமிழகஅரசுக்கு பள்ளி,கல்லூரிகள் மீது அக்கறை இல்லை டாஸ்மாக் மீது தான் உள்ளது என அருப்புக்கோட்டையில் கனிமொழி எம்பி., கூறினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்று வருகிறது.இதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, தமிழகஅரசு கிராம சபை கூட்டத்திற்கு தடை விதித்து கூட்டம் நடத்துபவர்கள் மீதுவழக்கு பதிவு செய்து வருகிறது.திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தை கண்டு ஆளுங்கட்சியினர் பயந்து விட்டனர்.தனக்கு லாபமான திட்டத்தை மட்டுமே தமிழக அரசு செய்து வருகிறது.அரசுக்கு மதுபான கடைகளில் இருக்கும் அக்கறை வேறு எதிலும் இல்லை.கொரோனா ஊரடங்கு காலத்தில் முதலில் திறக்கப்பட்டது டாஸ்மாக் தான்.இவ்வாறு அவர் பேசினார்.