வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ 3 லட்சம் மோசடி

விருதுநகரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவி சசிகலாவுக்கு நர்ஸ் வேலை வாங்கி தருவதாக விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்த அ.திமு.க.பிரமுகர் தவசேகர் மோசடி;

Update: 2021-07-05 14:15 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் புகார் அளிக்க வந்த மோசடியான நபர் ராகவேந்திரன்

விருதுநகரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவி சசிகலாவுக்கு நர்ஸ் வேலை வாங்கி தருவதாக விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் தவசேகர் என்பவர் கடந்த ஆண்டு மார்ச் 22 ம் தேதி ரூ 3 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது வரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது அப்பணத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்து விட்டதாகவும் அவர் திருப்பி தந்தால் தான் பணத்தை திருப்பி தருவேன் என்று தவசேகர் கூறி உள்ளார். தவசேகர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தருமாறு ராகவேந்திரன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

Similar News