ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பெண்கள் ஆட்சியர் வாகனம் முன் தர்ணா
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளபட்டி சேர்ந்தவர் மீனா இவரது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டிற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து பாதைவிட மறுப்பதாக கூறப்படுகிறது மேலும் இவர்களுடைய பட்டா நிலத்தையும் சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. பட்டா நிலத்தை அளந்து தரக் கோரியும் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாச்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த மீனாவின் குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று தங்களது வீட்டிற்கு செல்லும் பொது பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்