விழுப்புரம் மாவட்டத்தில் 85,105 பேருக்கு தடுப்பூசி

விழுப்புரம் மாவட்டத்தில் 85,105 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 06:53 GMT

பைல் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 63,829 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 21,276 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 85,105 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News