இலவச தையல் இயந்திரம் பெற பெண்களுக்கு சமூக நலத்துறை அழைப்பு
சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகம் மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், கல்விச் சான்று, ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளி சான்று (அரசு மருத்துவரிடம் இருந்து பெற்றது), விதவைச் சான்று, கணவரால் கைவிடப்பட்டவா் சான்று (வட்டாட்சியரிடம் இருந்து பெற்றது), தையல் கற்றதற்கான சான்று, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தை நேரில் அணுகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.