விழுப்புரத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வக்கீல்கள் சங்கம் சார்பாக அனைத்து வக்கீல்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-29 13:19 GMT

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக வங்கி சேவை அஞ்சலக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வக்கீல்கள் சங்கம் சார்பாக அனைத்து வக்கீல்களும் பணிக்கு வராமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வக்கீல்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து விதமான நீதிமன்ற பணிகளும் முடங்கின.

Tags:    

Similar News