சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: விழுப்புரம் புதிய டி.ஐ.ஜி

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என புதிய டி.ஐ.ஜி கூறியுள்ளார்

Update: 2023-05-21 08:04 GMT

விழுப்புரம் புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜியாவுல் ஹக்

விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக இருந்த பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜியாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார். ஜியாவுல் ஹக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழகத்தில் ஏஎஸ்பியாக பணியில் சேர்ந்தது முதல் தமிழை மிக ஆர்வமாகவும், தீவிரமாகவும் கற்றுக்கொண்டவர்.

ஜியாவுல் ஹக் இன்று விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் குறித்து பொது மக்கள் தகவல் அளிக்கலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும்.

தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம்.

ரவுடிகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். புதுச்சேரி மாநிலம் அருகில் விழுப்புரம் உள்ளதால் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதை தடுக்க சோதனை சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News