விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கலெக்டர் அறிவித்தார்.;
கன மழை ( பைல் படம்)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று (8ம் தேதி) முதல் 11ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மழையால் எற்படும் பாதிப்புகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு உதவ அரசு தீவிர பணியில் இறங்கியுள்ளது. மேலும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, , காஞ்சிபுரம் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.