விழுப்புரத்தில் 25-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-ந் தேதி நடைபெறும் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்;

விழுப்புரம் கலெக்டர் மோகன்.
விழுப்புரம் கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்கலாம் என தெரிவித்து உள்ளார்.