மரக்காணம் அருகே அரசு பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-10-27 15:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கடபாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் இன்று மாலை இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக இன்று காலை மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மரக்காணத்துக்கு காரில் புறப்பட்டார். இன்று மதியம் மரக்காணம் அருகே கடபாக்கத்துக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் மரக்காணம் முதலியார் குப்பத்துக்கு புறப்பட்டு சென்றார்.

மரக்காணம் பஸ் நிறுத்தம் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் பொன் கவுதமசிகாமணி, ரவிக்குமார் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News