இளம் வாக்காளர்கள் வாக்காளிக்க வேண்டும் : வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்
இதையொட்டி பின்னர், 80 வயது முதல் 90 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இளம் வாக்காளர்கள் தான் நல்ல அரசு அமைய தொடர்ந்து வாக்காளிக்க வேண்டும் என்றார் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் தேசிய வாக்காளர் தின விழாவில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழாவில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், நம்முடைய தேசத்தை சிறந்த தேசமாக மாற்ற நமக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது நாம் நமது வாக்குரிமையை வைத்து சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை நிலை நாட்டிய இந்தியா ஜனநாயக நாடு என்பதை உலகிற்கு பறைசாற்ற இளைஞர்கள் தொடர்ந்து ஆயுள் காலம் முழுவதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.
பின்னர், 80 வயது முதல் 90 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .