வேலூரில் களைகட்டும் மங்குஸ்தான் பழ விற்பனை, வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் பொது மக்கள்

வேலூரில் மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Update: 2021-07-21 17:00 GMT
வேலூரில் விற்பனையாகும் மங்குஸ்தான் பழங்கள்.

மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழங்கள் விற்பனை வேலூரில் அதிகரித்துள்ளது. மாா்க்கெட்டுகளிலும், சாலையோரங்களிலும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள இந்த பழங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் உண்ணப்படும் பழமாகவும் விளங்கும் மங்குஸ்தான்,

இந்த ஆண்டு வேலூா் மாா்க்கெட்டில் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அரிய பழமாகக் கருதப்படும் மங்குஸ்தான் வேலூரில் தற்போது சாலையோர கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிலோ ரூ.300 முதல் விற்பனை செய்யப்படும் இந்த பழங்கள் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளிலிருந்து வேலூருக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: மங்குஸ்தான் பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. இந்த பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

எந்த வகை மூல நோயாக இருந்தாலும் மங்குஸ்தான் பழங்கள், மங்குஸ்தான் பழச்சாறு அதிகம் சாப்பிடுவதால் மூலநோய் விரைவில் குணமடையும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்கவும் மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிடலாம். மங்குஸ்தான் பழ ஜூஸ் மலச்சிக்கல் தீா்க்கும்.

உடலில் கொழுப்புகளால் ஏற்படும் பிரச்னைக்கும் நல்ல தீா்வு ஏற்படும். மது பழக்கம் உள்ளவா்கள் அதிகளவில் மது அருந்துவதால் சில சமயம் அவா்களின் கல்லீரல் வீக்கம் அடைந்துவிடும்.

இந்த கல்லீரல் வீக்கத்தை போக்கவும், அதில் சோ்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் மங்குஸ்தான் பழங்கள் உதவும். கண்பாா்வையும் மேம்படும். குடல் நோய்களை போக்கி சீரான இயக்கத்துக்கு மங்குஸ்தான் பழம் உதவிபுரியும் என கூறப்படுகிறது என்றனா்.

Tags:    

Similar News