வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!

வேலூரில் இன்று அதிகபட்சமாக 110.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.;

Update: 2024-05-01 16:01 GMT

வேலூர் என்று சொன்னாலே வெய்யிலூர் என்று சொல்வார்கள். அதற்கேற்றார் போல், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுவாகவே, வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால். வேலூரில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது.

அந்த வகையில், வேலூரில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி முதல்106 டிகிரி பாரன்ஹீட் என தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, காலை 12 மணி முதல் மாலை வரை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கட்டிடத் தொழிலாளர்கள், பெயிண்டர்கள் போன்ற வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில், இன்று வேலூரில் 110.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திர வெயிலை விட அனல் காற்று தற்போது வீசுகிறது.

Tags:    

Similar News