வேலூர் புத்தக திருவிழா: 12ம் தேதி வரை நீட்டிப்பு
Vellore Book Fair 2023-இன்றுடன் முடிவடைய இருந்த வேலூர் புத்தகத் திருவிழா, புத்தக ஆர்வலர்களின் வேண்டுகோளை அடுத்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது;
Vellore Book Fair 2023
Vellore Book Fair 2023-வேலூர் மாவட்டத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத் துறையின் சார்பில் நேதாஜி மைதானத்தில் கடந்த 24-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின் சார்பில் 104 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவில் அரங்குகள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.
மேலும், ஒவ்வொரு நாட்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பயன்படும் வகையில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் மற்றும் அறிவு சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் நிறைவு தேதியை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று வருகிற 12-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவியர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயனடையுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2