வேலூரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
வேலூரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கிரீன்சர்க்கிள், அண்ணாசாலை, காமராஜர் சிலை சந்திப்பு, மக்கான் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம், வாகன ஆவணங்கள் உள்ளதா என்றும், சீட்பெல்ட், ஹெல்மெட் அணிந்துள்ளார்களா என்று சோதனை செய்தனர்.
இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாத 20 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத்தவிர செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, தடை விதிக்கப்பட்ட இடத்தில் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியது, மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.100 வீதம் ரூ.30 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்