மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிப் படுகொலை செய்த கணவன்

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிப் படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-04 18:15 GMT

மனைவியின் கள்ளக்காதலனை கணவன் கொலை செய்தார்.( கள்ளக்காதல் பைல் படம்)

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு(50), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரும் பிரிந்து அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55), பேரணாம்பட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த தம்பதி இடையேயும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோவிந்தசாமி தனியாக வசித்து வந்தார். |

இந்நிலையில் கோவிந்தசாமியும் தனிமையில் இருக்க, லட் சுமி தனிமையில் இருக்க இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது.

அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று வர வட்டிக்கு பணம் கொடுத்துள்ளாராம். இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருப்பது வழக்கம்.

இந்த தகவல் லெட்சுமியின் கணவன் மேஸ்திரி டில்லி பாபுவுக்கு தெரியவர ஆத்திர அடைந்த டில்லி பாபு கோவிந்த சாமியை மிரட்டியுள்ளார். இதுதொ டர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கோவிந்தசசாமி தொடர்ந்து லட்சுமியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம்.

அதேபோல் நேற்றும் லட்சுமி விட்டிற்கு சென்ற கோவிந்தசாமி நீண்ட நேரம் இருந்துவிட்டு தனது வீட்டிற்கு வந்து இரவு 10மணியளவில் டிவிபார்த் துக்கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த டில்லிபாபு, 'என்மனைவி விட்டிற்கு ஏன் செல்கிறாய். அவளுடன் பேசாதே என்றால் கேட்கமாட்டீயா' எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப் போது ஆத்திரமடைந்த டில்லிபாபு தான் கொண்டு வந்த அரிவாளால், கோவிந்தசாமியை சரமாரி வெட்டியுள்ளார். கோவிந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டுஅக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்தடில்லிபாபு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த கோவிந்தசாமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமிசிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். சாமி

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், உம்ரா பாத் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உம்ரா பாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிவிட்ட டில்லிபாபுவை டிஎஸ்பி சரவணன் தலைமையிலான 3 தனிப்படை போலி சார் தேடி வந்தனர்.

இதற்கிடையே டில் லிபாபு இன்று காலை ஆம்பூர் டவுன் போலீசில் சரணடைந்தார். அவரை, போலீசார் கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

Tags:    

Similar News