பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

Update: 2021-06-25 13:44 GMT

பெட்ரோல் டீசல் விலை இந்த மாதத்தில் 12-வது நாளாக விலை ஏற்றம் அடைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.60 எனவும் பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.20 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் டீசல் 94.03 க்கு விற்பனையானது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.84 க்கு விற்பனையானது. டீசல் ரூ.94.78 ஆக இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.40, டீசல் ரூ.94.01ஆகவும் இருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது.பெட்ரோல் ஒரு லிட்டர் 99.88, டீசல் ரூ.93.86 ஆக இருந்தது.

பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேலும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிச் சென்று கொண்டிருப்பது தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags:    

Similar News