வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிப்பு
விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது;
வேலூரில் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் .சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் இதனை கடைபிடிப்பதில்லை. எனவே விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
அதனடிப்படையில், வேலூர் பேருந்து நிலையத்தில் முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.இதன்மூலம் ரூபாய் 10,500 வசூலிக்கப்பட்டது.