கள்ளக்காதலுக்கு இடையூறு, காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து, மனைவி கொலை செய்தார்.;
சித்தூர் ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் வாசு (49), கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி சொப்னபிரியா(45). இந்தி லையில், வாசு கடந்த 19ம்தேதி நெஞ்சுவலியால், உயிரிழந்து விட்டதாக பிரியா தனது மாமியா ருக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாசுவின் சட லத்தை அவரது சொந்த ஊரான சந்திரகிரி மண்டலம் அரிகவாரி பள்ளி கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.
அங்கு சடலத்தை பார்த்த வாசுவின் மகன், தாய் ஆகிய இருவரும் சந்தேகம் அடைந்தனர். மேலும், வாசுவின் சாவில் சந்தேகம் உள்ளதாக சந்திரகிரி போலீ சில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார்
விசாரணை நடத்தினர்.
இதில், வாசு வசிக்கும் பகுதியான ஸ்ரீநகர் கால னியில் அக்கம்-பக்கம் வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சொப்ன பிரியா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, சொப்ன பிரியாவை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தினர்.
அதில், சொப்னபிரியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த மணி கண்ட ன்(35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கணவன் வேலைக்கு சென்றவுடன் மணிகண்டன் வந்து விடுவார் பகல் முழுவதும் இருவரும் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இதனையறிந்த வாசு பலமுறை மனைவியை கண்டித்தார். ஆனால், சொப்னபிரியா கள்ளக்காதலனால் கிடைக்கும் சுகத்தை விட விரும்பவில்லை.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி வாசு வழக்கம் போல பணிக்கு சென்றார். வீட்டுக்கு வரும் வழியில் மதுபா னம் கடைக்கு சென்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சொப்ன பிரியா தனது கள்ளக்காதலன் மணி கண்டனுக்கு இரவு 11 மணி அளவில் போன் செய்து வரவழைத்தார்.,
கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் எனது கணவனை கொலை செய் என்று கூறியுள்ளார்.
இல்லை என்றால் என்னை கொலை செய்து விடு ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மணிகண்டன் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த வாசுவின் கழுத்தில் செல்போன் சார்ஜர் ஒயர் கொண்டு இறுக்கி பிடித்துள்ளார்.
இதில் வாசு மூச்சுத்திணறி பரி தாபமாக உயிரிழந்தார். பின்னர் சொப்னபிரியா தனது மாமியார் மற்றும் மகனுக்கு போன் செய்து நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக நாடகமாடி பது தெரிய வந்தது.
இதையடுத்து, மணி கண்டன், சொப்னபி ரியாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.