உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூரில் பறக்கும்படை
வேலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி ஏழு ஒன்றியத்திலும் 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது
வேலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி, பணம், பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க அந்தந்த பகுதி வட்டாட்சியர் தலைமையில், ஏழு ஒன்றியத்திலும், 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர் 24 மணி நேர பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். பேனர் வைக்க கூடாது. அனுமதியில்லாமல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. அதிக கூட்டத்துடன் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.