வேலூர் மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 41 பேருக்கு ரூபாய் 9,200 அபராதம் விதிக்கப்பட்டது
வேலூர் மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாத 41 பேருக்கு ரூபாய் 9,200 அபராதம் விதிக்கப் பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் மாஸ்க் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் வேலூர் மாநகராட்சியில் 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில், மாஸ்க் அணியாமல் வந்த பயணிகள், வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
அதோடு ஒரே நாளில் மாஸ்க் அணியாமல், பொது இடங்களில் கொரோனா விதிமீறிய 41 பேருக்கு தலா ரூபாய் 200 வீதம் மொத்தம் ரூபாய் 8,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளி பின்பற்றாத 2 கடைக்காரர்களுக்கு தலா ரூபாய் 500 வீதம் மொத்தம் ரூபாய் 1,000 அபராதம் விதிக்கப் பட்டது.