வேலூர் மாவட்டம் காட்பாடியில் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வழங்கல்

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற கையேட்டில் அறிமுகம், உள்கட்டமைப்பு, நலவாழ்வும் சுகாதாரமும், உளவியல் விவரம் உள்ளது

Update: 2022-02-08 12:45 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்ககம் இணைந்து தயாரிக்கப்பட்ட பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு என்ற புத்தகமானது இன்று காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கி கையேட்டினை மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்விற்கு உதவித் தலைமை ஆசிரியை டி.என்.ஷோபா தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், ஜ.செலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களுக்கான பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற கையேட்டில் அறிமுகம், உள்கட்டமைப்பு, நலவாழ்வும் சுகாதாரமும், உளவியல் மற்றும் சமூக நோக்கங்கள், குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு தரப்பினரின் பங்கும் கடமைகளும், கண்காணித்தல், மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த சரிபார்ப்பு பட்டியல் ஆகிய தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் மற்றும் தேவையான இடங்களில் புகைப்படங்களுடன் கூடிய கையேடாகவும் மாணவர்கள் தங்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டி நூலாகவும் இந்த கையேடு அமைந்துள்ளது.

மேலும் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன குழந்தை திருமணத்தை தடுக்க தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட உதவி எண் 1098 இணைய பாதுகாப்பு உதவி எண் 155260, இலவச தொலைபேசி சேவை எண் 14417 போன்ற விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News