வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்
வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் ஆன்லைனில்அபேஸ் செய்த பணத்தை விரைவாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்,;
ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை மீட்டு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்த சைபர்கிரைம் போலீசார்
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவர் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர் மொத்தமாக துணி வாங்குவதற்கு யூடியூப் பக்கத்தில் தேடியபோது, அதில் இருந்த ஒரு வீடியோவை பார்த்து, அதை உண்மை என நம்பி முன்பணமாக ரூ.22,247/- செலுத்தி ஆர்டர் கொடுத்துள்ளார். பணத்தை செலுத்திய பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள இயலவில்லை.
இது சம்பந்தமாக கடந்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் துரித நடவடிக்கை எடுத்த போலீசார், மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி, அவர் இழந்த மொத்த ரூ.22,247/- பணத்தையும் மீட்டு, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் , சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களின் உண்மை தன்மை அறியாமல் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினா்.