வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2021-07-16 12:35 GMT

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது . தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 38 பேராக இருந்த நிலையில், இன்று 27 பேராக குறைந்துள்ளது . அதேநேரத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா உள்நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்திருக்கிறது .

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது , ' தனியார் மருத்துவமனைகளில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மட்டுமே தற்போது கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மற்றபடி  வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜி பி எச் மருத்துவ மனைகளுக்கு மட்டுமே கொரோனா நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர் ' என்றனர் .

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்துக்கு நேற்று இரவு மேலும் 14 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் 4 ஆயிரம் டோஸ்களும், கோவிஷீல்டு 10 ஆயிரம் டோஸ்களும் அடங்கும் . இவை உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News