கழனிபாக்கம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கிய கலெக்டர்
அணைக்கட்டு அருகே கழனிபாக்கம் கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.;
தமிழகத்தில் வரும் பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது அதனடிப்படையில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம் கழனிபாக்கம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் தமிழர் திருநாளை முன்னிட்டு, 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.