குடியாத்தத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் திறப்பு

குடியாத்தம் மற்றும் கேவி குப்பத்தில் பல்வேறு அரசு கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்;

Update: 2022-01-19 14:15 GMT

குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக ரூபாய்.8.65 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக குடியிருப்பு மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) சங்கரலிங்கம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்ஜெயன் குடியாத்தம் வட்டாட்சியர் திருமதி.லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News