வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க 3 சேவை மையங்கள் அமைப்பு

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க 3 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்;

Update: 2021-07-23 16:18 GMT

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க 3 சேவை மையங்கள் அமைப்பு

பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் தேர்வுத்துறை சார்பில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த 19 ம்தேதி வெளியிடப்பட்டது .

இதில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மீண்டும் மையங்களில் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இன்று முதல் வரும் 27 ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும் எழுதும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்து எழுதும் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.

இந்த ஆண்டு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் வரும் 28 ம்தேதி தட்கல் முறையில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணம் ரூபாய்1000 செலுத்த வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் வசதிக்காக 3 இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி பெண்கள் மேல்நி லைப்பள்ளி ஆகிய இடங்களில் அரசு தேர்வுத்துறை சார்பில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

Tags:    

Similar News